×

ஜார்க்கண்ட் முதல்வர் தலைமறைவு?.. ராஞ்சியில் 144 தடை: டெல்லியில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.36 லட்சம் பறிமுதல்

ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லம், அமலாக்கத்துறை அலுவலகம், ஆளுநர் மாளிகை பகுதி ஆகியஇடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெறலாம் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமறைவாக உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

ஜனவரி 20-ம் தேதி நில மோசடி வழக்குடன் தொடர்புள்ள சட்ட விரோத பண பரிவர்தனை குற்றச்சாட்டு குறித்து ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அவரிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இதனை அடுத்து அவர் ஜனவரி 31-ம் தேதி பிற்பகல் 1 மணி அளவில் ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தனது இல்லத்தில் விசாரணை மேற்கொள்ளலாம் என அமலாக்கத்துறைக்கு மின்னஞ்சல்(EMAIL) அனுப்பியிருந்தார். இந்த நிலையில், டெல்லி மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இது திட்டமிட்ட செயலாக பார்க்கப்படுவதாக அவரது கட்சி தொண்டர்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டத்திலும், பேரணியிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆளுநர் மாளிகையும் முற்றுகையிடபட்டது. இதனை கருத்தில் கொண்டு தற்போது ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் ஆகிய இடங்களில் 100 மீ சுற்றளவிற்கு 144 தடை உத்தரவு பிறபிக்கபட்டுள்ளது.

நில மோசடி வழக்கில் ஆஜராக வழியுறுத்தி பல்வேற் முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சுமார் ரூ.36 லட்சம் பறிமுதல் செய்யபட்டதுடன், அவர் பயன்படுத்தி வந்த 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யபட்டுள்ளது. தொடர்ந்து நேற்று முதல் முதல்வர் ஹேமந்த் சோரனை தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை கூறி அமலாக்கத்துறை சார்பில் டெல்லி காவல்துறையில் அமலாக்கதுறையினர் தாக்கல் செய்தனர்.

The post ஜார்க்கண்ட் முதல்வர் தலைமறைவு?.. ராஞ்சியில் 144 தடை: டெல்லியில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.36 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ranchi ,Delhi ,Chief Minister ,Hemant Soran ,Enforcement Office ,Jharkhand ,Dinakaran ,
× RELATED கைதுக்கு எதிரான முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனு தள்ளுபடி